ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றது. அத்துடன் பலரது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

பல விவசாய நிலங்களும் நீரினால் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தற்பொழுது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக பலர் இடைத்தங்கள் முகாம்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில்1043 குடும்பங்களைச் சேர்ந்த 3524 பெயர் இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வட்டக்கச்சி ஊடாக கண்டாவலை செல்லும் பிரதான வீதியில் புளியம்போக்கனை பகுதியில் வீதி குறுக்கறுத்து வெள்ளம் பாய்வதன் காரணமாக பெரியகுளம் வட்டகச்சி செல்லும் வீதி முற்றாக தடைப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here