இன்று காலை 10.00 மணி நிலவரப்படி, இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
அம்பாறையில் 8 இறப்புகளும், பதுளை, புத்தளம், திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு அனர்த்த சம்பவங்களினால் இரண்டு பேர் காணாமல் போயுள்ளதாகவும், 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் DMC மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 23 மாவட்டங்களில் 99,876 குடும்பங்களைச் சேர்ந்த 335,155 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
8,678 குடும்பங்களைச் சேர்ந்த 27,717 பேர் 279 பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 18,025 குடும்பங்களைச் சேர்ந்த 61,290 பேர் உறவினர்களின் வீடுகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் DMC கூறுகிறது.
சீரற்ற காலநிலை காரணமாக 1,708 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 95 வீடுகள் அழிந்துள்ளன.







