முல்லைத்தீவு, விசுவமடு – இளங்கோபுரம் பகுதியில் சிறுத்தை ஒன்று வீடு ஒன்றிற்குள் புகுந்த சம்பவம் நேற்று (27.11.2024) பதிவாகியுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விசுவமடு, இளங்கோபுரம் கிராமத்தில் திடீரென சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் உள்நுழைந்துள்ளது.

இதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து திணைக்களத்தின் அதிகாரிகள் குறித்த சிறுத்தையை மீட்டு கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில், தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் காடுகளுக்கு அண்மையில் இருப்பவர்கள் அவதானமாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here