கொழும்பு, பேலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவலோக வடரவும பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (30.11.2024) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொட பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பொரலந்த பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 10 கிராம் 500 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் பேலியகொட பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here