நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 2 ரூபாவினால் குறைத்து 309 ரூபாவாக நிர்ணயித்துள்ளது.
அத்துடன், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அதன் புதிய விலை 286 ரூபாவாகும்.
அதேநேரம் மண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 188 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 371 ரூபாவாகவும், சுப்பர் டிசல் லீற்றர் ஒன்றின் விலை 313 ரூபாவாகவும் மாற்றமின்றி தொடரும் என இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதேநேரம், இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தங்களுக்கு நிகராக லங்கா ஐஓசி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்களும் தங்களது எரிபொருட்களின் விலையைக் குறைத்துள்ளன.








