மோதல் காரணமாக இன்னல்களுக்கு முகங்கொடுத்த நிலையில் லெபனானில் தங்கியிருந்த 27 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
குறித்த 27 பேரும் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டை வந்தடைந்தவர்களில் 5 சிறார்கள், 3 பெண்கள் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, மோதல் காரணமாக லெபனானில் நிர்க்கதியாகியிருந்தவர்களில் இதுவரை 53 பேர் நாட்டை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








