காலி, கொஸ்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ரயில் மார்க்கத்தில் கொழும்பிலிருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொஸ்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று புதன்கிழமை (11.12.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் இறுதியாக ஊதா நிற சட்டையும் , சிவப்பு நிற சாரமும் அணிந்திருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் எல்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








