களுத்துறை, இங்கிரிய பிரதேசத்தில் வனப்பகுதி ஒன்றில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15.12.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இங்கிரிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை , ஹந்தபான்கொட பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடம் இருந்து 1,095 லீற்றர் (06 பீப்பாய்கள்) சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








