நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 423 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

போட்டியின் நான்காம் நாள் ஆட்டமான இன்று 658 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 234 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.

பந்துவீச்சில் மிட்செல் சான்ட்னர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 347 ஓட்டங்களையும், இங்கிலாந்து அணி 143 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டதுடன், இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 453 ஓட்டங்களைக் குவித்தது.

இந்த நிலையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 எனும் அடிப்படையில் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here