அநுராதபுரம், தந்திரிமலை பிரதேசத்தில் ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் பாடசாலை மாணவர்கள் இருவர் நேற்று புதன்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளதாக தந்திரிமலை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தந்திரிமலை பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய இரு பாடசாலை மாணவர்கள் ஆவார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
பாடசாலை மாணவர்கள் இருவரும் ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் இரண்டை அநுராதபுரம், தந்திரிமலை ரஜ மஹா விகாரைக்கு முன்பாக உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் மாற்ற முயன்றுள்ளனர்.
இதன்போது, பாடசாலை மாணவர்கள் வைத்திருந்த நாணயத்தாள்கள் தொடர்பில் சந்தேகமடைந்த விற்பனை நிலையத்தின் உரிமையாளர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இரு பாடசாலை மாணவர்களையும் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தந்திரிமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








