தற்போதைய அரிசி விலைக்கு அமைய எதிர்காலத்தில் உணவுப்பொதி ஒன்றின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அநுராதபுர மாவட்ட சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அநுராதபுரத்தில் இன்று (02.01.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அச்சங்கத்தின் தலைவர் இந்திக்க அருண குமார, தற்போதைய அரிசி நெருக்கடி காரணமாக அப்பகுதியிலுள்ள உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 5,200 மெற்றிக் தொன் அரிசியின் இரண்டாவது தொகுதியான 580 மெற்றி தொன் அரிசி நேற்று நாட்டை வந்தடைந்தது.

இதன்படி, அரிசி விநியோகம் இன்றுடன் நிறைவடைய உள்ளதாக, கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அரச வர்த்தக இதர சட்ட நிறுவனத்தின் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here