கொலம்பியாவில், சுற்றுலா பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொலம்பியா நாட்டின் தென்மேற்கே அமைந்துள்ள நெடுஞ்சாலையில் 30க்கும் அதிகமான பயணிகளுடன் சென்ற சுற்றுலா பேருந்தே விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் 13 பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த மீட்புக்குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலைகளில் சேர்த்துள்ளனர்.

மேலும், இவ் விபத்துக் குறித்து அந்நாட்டுக் காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here