மாதம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிஹிஜய செவன தொடர்மாடி  குடியிருப்புக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05.01.2025) பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோதரை மற்றும் மாளிகாவத்தை பகுதிகளைச்  சேர்ந்த 31 மற்றும் 33 வயதுடையவர்களு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யபப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவரிடமிருந்து 15 கிராம் 300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் மற்றுமொரு நபரிடமிருந்து 13 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும்  கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகநபர்கள் இன்று திங்கட்கிழமை (06) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மாதம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here