மன்னார், விடத்தல்தீவு பகுதியில் இந்திய அதானி நிறுவனத்தினால் காற்றாலை மின் நிலையத்தை உருவாக்கும் திட்டம் தொடர்பில் செய்து கொண்ட ஒப்பந்தத்தை இரத்துச் செய்யக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மே 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
குறித்த மனுவை இலங்கை பசுமை அமைப்பின் தலைவர் சந்திம அபயவர்தன தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எம்.யூ.பி. கரலியத்தவினால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது, இந்தத் திட்டம் தொடர்பான பல முக்கியமான வழக்குகள் அடுத்த மார்ச் மாதம் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதாக அரச சட்டத்தரணி தெரிவித்தார்.
இந்தத் திட்டம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
அதன் பின்னர், சம்பந்தப்பட்ட மனுவை மே 23 ஆம் திகதி பரிசீலிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








