நிலவும் சீரற்ற காலநிலைக் காரணமாக கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் உள்ள சகல பாடசாலைக்கும் இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி கருத்துரைத்த கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, தற்போது கிழக்கு மாகாண பாடசாலைகளில் தவணைப் பரீட்சைகள் இடம்பெற்று வருவதனால், இன்றைய தினத்திற்கான பாடசாலை தவணை பரீட்சைகள் எதிர்வரும், 25 ஆம் திகதி இடம்பெறும் என குறிப்பிட்டார்.
அதேநேரம், வட மத்திய மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலைக் காரணமாக அந்த மாகாணத்தின் சகல பாடசாலைகளும் இன்றைய தினம் மூடப்படவுள்ளதாக மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.








