கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (ஐ.எம்.எல்) ரி20 கிரிக்கெட் தொடர் கடந்த நவம்பர் மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகும் என திட்டமிடப்பட்ட நிலையில் ஒத்திவைக்கப்பட்ட குறித்த தொடர் மீண்டும் அடுத்த மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியின் தலைவராக குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய 6 அணிகள் மோதும் இந்த தொடர் பெப்ரவரி 22ஆம் திகதி முதல் மார்ச் 16ஆம் திகதி வரை இந்தியாவின் 3 தானங்களில் நடைபெறவுள்ளது,

இந்திய அணியின் தலைவராக சச்சின் டெண்டுல்கரும், அவுஸ்திரேலியாவின் தலைவராக ஷேன் வொட்சனும், இங்கிலாந்து தலைவராக இயோன் மோர்கனும், வெஸ்ட் இண்டீஸ் தலைவராக பிரையன் லாராவும், தென்னாபிரிக்கா தலைவர் ஜாக் காலிஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here