நாட்டின் பல பகுதிகளில் தேயிலை பயிர்ச்செய்கையில் ஏற்பட்டுள்ள இனந்தெரியாத பங்கசு தொற்று காரணமாக சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் பொருளாதார ரீதியாக நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

இந்த பங்கசு தொற்றால் தேயிலை கொழுந்துகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாகத் தேயிலை உற்பத்தியானது நூற்றுக்கு 40 முதல் 50 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது.

குறிப்பாக இரத்தினபுரி, பலாங்கொடை உள்ளிட்ட பகுதிகளில் இந்த நிலைமை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த பங்கசு தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here