வடக்கு பிராந்திய கடற்படையினர் எதிர்வரும் (24/1/2025) மற்றும் (27/1/2025) ஆகிய இரண்டு நாட்களும் பருத்தித்துறை கடலில் கடற்படை கலங்களான P475, P481 ஆகிய கலங்களிலிருந்து சூட்டு பயிற்சி மேற்கொள்ள இருப்பதால் மீனவர்களை குறித்த பகுதிக்குள் பிரவேசிக்க வேண்டாமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கரையோர பொலிஸ் படையின் வடக்கு பிராந்திய பணிப்பாளர் யாழ்ப்பாணம் நீரியல்வளத் திணைக்களம் ஊடாக அனைத்து கடற்தொழில் சங்கங்களுக்கும் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

எதிர்வரும் 24ஆம் திகதி காலை 09.00 மணியிலிருந்து மாலை 04.00 மணிவரை

23.2NM north east of ppd

Coordinate (s)of the location

09°55’N:080°42E

09°55N:080°36E

09°51N:080°42E

09°51N:080°36E. 

ஆகிய கடற்பரப்புக்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமெனவும், அதே போன்று எதிர்வரும் 27ஆம் திகதி அன்று காலை 09.00 மணியிலிருந்து மாலை 04.00 மணிவரை

23.2NM north east of ppd

Coordinate (s)of the location

09°55’N:080°42E

09°55N:080°36E

09°51N:080°42E

09°51N:080°36E 

ஆகிய குறித்த கடற்பரப்புகளில் உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாமென மீனவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here