கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய, நாடு தழுவிய ரீதியில் பாடசாலைகளில் தரம் 6க்கு மேற்பட்ட மாணவிகள் எதிர்நோக்கும் சுகாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.
இந்தச் சந்திப்பு நேற்று புதன்கிழமை (22) அமைச்சு வளாகத்தில் இடம்பெற்றது.
கல்வி அமைச்சின் சுகாதாரம் மற்றும் போஷாக்கு கிளையின் பணிப்பாளர், அந்த கிளையின் அதிகாரிகள், இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பிரதி பணிப்பாளர் மற்றும் சுகாதார நாப்கின் உற்பத்திக்காக இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்ட நான்கு பிரதான நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.








