காலி, இமதுவ, அங்குலுகஹா சந்தியில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று (26/1/2025) காலை இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிறுத்தப்பட்டிருந்த பேருந்தொன்றில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து மோதியதுடன், அதன் பின்னால் வந்த மற்றொரு பேருந்து அதன் மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் 29 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் 20 பேர் இமதுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 9 பேர் கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here