சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.

சென்னையில் இடம்பெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதற்கமைய, முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றது.

இந்தநிலையில், 166 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இந்திய அணி 19.2 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் போட்டியில் வெற்றிபெற்றது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் திலக் வர்மா ஆட்டமிழப்பின்றி 72 ஓட்டங்களை அதிகபட்ச ஓட்டமாக பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக கைப்பற்றினார்.

இந்தநிலையில், 5 போட்டிகள் கொண்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2 க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here