மாகாண மட்டத்தில் குற்றப் பிரிவுகளை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் இந்த பிரிவுகள் அமைக்கப்படுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இந்த பிரிவுகளை ஸ்தாபிக்கும் பணிகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரிவுகளுக்கான அதிகாரிகளை நியமிப்பதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
தற்போது தென் மற்றும் மேல் மாகாணங்களில் மாத்திரமே இவ்வாறான பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தலை தடுப்பதிலும் இந்த குற்றப்பிரிவுகள் தீவிர பங்கு வகிக்கும்.
ஸ்தாபன குற்றப்பிரிவுகளின் ஊடாக பாதாள உலகக் குற்றச் செயல்களை ஒடுக்குவதற்கு அவர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து துரித நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








