கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள மண்முனை பாலம் பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை செவ்வாய்க்கிழமை (28/1/2025) மாலையில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் முற்றுகையிட்டதையடுத்து உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் தப்பி ஓடியதோடு 5 இலட்சத்து 25 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு 22 பெரல்கள் கொண்ட கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகல் ஒன்றினையடுத்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி. லலித் லீலாரட்ணவின் ஆலோசனைக்கமைய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம.ஜி. பண்டாரவின் வழிகாட்டலில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு சப் இன்பெஸ்டர் மதுசாங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவதினமான நேற்று மாலை மண்முனை பாலத்துக்கு அருகிலுள்ள வாவிபகுதியை அண்டிய காட்டுப்பகுதியில் சூட்சகமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை
முற்றுகையிட்டனர்.

இதன் போது பொலிசாரைக் கண்டு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் தப்பி ஓடியதையடுத்து அங்கிருந்து 5 இலச்சத்து 25 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு 22 பெரல்கள் கொண்ட கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்களை மீட்டு ஒப்படைத்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
[மட்டக்களப்பு நிருபர் – சதானந்தம் ஸோபிதன்]







