இன்று முதல் அமுலாகும் வகையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி அதன் புதிய விலை 220 ரூபாயாகும்.

ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 165 ரூபாயாகும்.

ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வெள்ளை சீனி கிலேவொன்றின் புதிய விலை 235 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பின் விலை 3 ரூபாவினால் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 285 ரூபாயாகும்.

ஒரு கிலோகிராம் வெள்ளை பச்சை அரிசியின் விலை 1 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 209 ரூபாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here