சுமார் 1800 கொள்கலன்கள் தற்போது கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

இந்தக் கொள்கலன்களை விரைவாக அகற்றுவதற்கான விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பசீவலி அருக்கொடட்டுள்ளதாக மேலதிக பணிப்பாளர் நாயகமும் சுங்கப் பேச்சாளருமான  தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமைக்குள் நெரிசலைத் தீர்ப்பது, துறைமுகத்தில் சுமூகமான செயல்பாடுகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் கொள்கலன்களை அகற்றுவதற்கான நான்கு நாள் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் அறிவித்துள்ளது. நேற்று தொடங்கிய இந்த நடவடிக்கை பெப்ரவரி 2ம் திகதி வரை நடைபெறும்.

குவிந்துள்ள கொள்கலன்களை அகற்றும் பணியை துரிதப்படுத்த முழு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இம்முயற்சியின் வெற்றிக்கு தமது பூரண ஆதரவை வழங்குமாறு சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் இலங்கை சுங்கம் கோரியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here