
கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக நேற்று இடம்பெற்ற விபத்தில் மயிரிழையில் தப்பியுள்ளனர். குறித்த விபத்து நேற்று இரவு 7 மணியளவில் A9 வீதியில் இடம் பெற்றுள்ளது.
யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கார், அதே திசையில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களை மோதியுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தி பயணித்த இருவர் சிறு காயங்களுக்குள்ளாகினர்.
விபத்து இடம்பெற்ற நேரத்தில் பாரிய வாகனங்கள் பிரதான வீதியில் பயணிக்காதமையால் உயிராபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் வாகன நெரிசல் ஏற்பட்ட நிலையில், போக்குவரத்து பொலிசார் போக்குவரத்தினை சீர் செய்தனர்.
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
[யாழ் நிருபர் – இரட்னசிங்கம் முரளிதரன்]







