சோமாலியாவில்  அல்கொய்தாவின் கிளை அமைப்பான அல் ஷபாப், ஐ.எஸ் போன்ற பல்வேறு தீவிரவாதக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சோமாலியாவிலுள்ள  ஐ.எஸ். தீவிரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா நேற்று (02)  வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்தத்  தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பலர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த தீவிரவாதக்குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்க இராணுவமும், சோமாலியப் பாதுகாப்புப்படையினருடன் இணைந்து தீவிரவாதஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here