இந்திய பிரதமர்  நரேந்திரமோடி இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா செல்ல இருப்பதாகத்  தகவல் வெளியாகி உள்ளது. பயணத்தின் போது அமெரிக்க ஜானதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை  சந்திக்கும் மோடி வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்காக மோடி வருகிற 12ஆம் திகதி அமெரிக்கா செல்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு நாள் பயணமாக பரிஸ் செல்லும் மோடி அங்கிருந்து வொஷிங்டன் டி.சி.க்குச் செல்வார் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக வெளியாகியிருக்கும் தகவல்களின் படி மோடி பெப்ரவரி 12ஆம் திகதி மாலை அமெரிக்கத் தலைநகரில் தரையிறங்குவார். என்றும் மறுநாள் ட்ரம்ப்பைச்  சந்தித்துப் பேசுவார் என்று கூறப்பட்டுள்ளது. ட்ரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பின் மோடி மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இது என்று கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here