நுகர்வோர் விவகார அதிகாரசபையின் கம்பஹா மாவட்ட சோதனைப் பிரிவினால் புறக்கோட்டையிலுள்ள கடையொன்றினுள் இருந்து விற்பனைக்கு தயாராக இருந்த காலாவதியான ஒரு தொகை பேரீச்சம்பழங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நேற்று (8/2/2025) நடத்தப்பட்ட இந்த சோதனையின் போது சுமார் 220 கிலோகிராம் எடையுள்ள பேரீச்சம்பழங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், உற்பத்தி ஆண்டு மாற்றப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் இருந்ததாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அடுத்த வாரம் மாளிகாகந்த நீதிமன்றத்தில் வணிக பணிப்பாளர் குழுவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.







