பாதீட்டிலே வட்டுவாகல் பாலத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளமையை தாம் வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இன அழிப்பு எனக் கூறப்படும் சம்பவம் நடந்தேறிய வரலாற்றுச் சிறப்பு மிக்க பாலத்தைப் புனரமைப்பது வரவேற்கத்தக்கது என செல்வம் அடைக்கலநாதன் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் போதும் கடந்த கால அரசாங்கத்தின் போதும் தாம் இந்த பாலத்தை நிர்மாணிக்க வேண்டும் என வலியுறுத்தியும் எவரும் அதனைக் கருத்தில் கொள்ளவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here