போக்குவரத்து துறையில் இனங்காணப்பட்டுள்ள சில நடைமுறைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகவும், தற்போது முறைமைப்படுத்தப்படாத சில போக்குவரத்து துறைகளை முறைமைப்படுத்துவதற்காகவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தின் சில ஏற்பாடுகளை சமகால தேவைகளுக்கு பொருந்தும் வகையில் திருத்தம் செய்வதற்காக அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள திருத்த சட்ட வரைபு முறைப்படியான முறைமையைப் பின்பற்றி பாராளுமன்றத்தின் அங்கீகராத்துக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இருந்தபோதிலும், பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் காரணமாக பாராளுமன்றத்தில்  அதற்காக அங்கீகாரத்தை பெற முடியவில்லை.

மேற்குறித்த சட்ட வரைபை மீண்டும் அரச வர்த்தமானியில் வெளியிட்டு, பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here