இலங்கையின் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற திட்ட மீளாய்வின் போது, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள், ஜனாதிபதி அனுர குமாரதிசாநாயக்கவிற்கு இந்த திட்டத்தின் முன்னேற்றம் குறித்து விளக்கமளித்தபோது இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது.

டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தும் செயல்முறையின் முன்னேற்றத்தை ஜனாதிபதி ஆய்வு செய்தார் எனவும் அதற்கான தேவையான ஆயத்த பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர் எனவும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் பரந்த டிஜிட்டல் பொருளாதார உத்தியின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்படும் பல திட்டங்களில் இந்த டிஜிட்டல் அடையாள அட்டை முயற்சியும் ஒன்றாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here