Friday, June 5, 2026
No menu items!

அமைச்சரவை அனுமதி

விசேட அதிரடிப் படைக்கு புதிய வாகனங்கள் – 100 உந்துருளிகள் மற்றும் 50 முச்சக்கர வண்டிகள் கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம்!

விசேட அதிரடிப் படையினருக்காக 100 உந்துருளிகள் மற்றும் 50 முச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது நாடு முழுவதும் செயல்பட்டு வரும் விசேட அதிரடிப் படையின் கீழ் 76 பிரதான முகாம்கள், 23 உப முகாம்கள் மற்றும் 14 விசேட பிரிவுகள் உள்ளன. அந்தப்படையினரிடம் தற்போது பயன்பாட்டில் உள்ள 314 உந்துருளிகளில் சுமார்...

தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.30,000 ஆக உயர்வு – அமைச்சரவை அங்கீகாரம்!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கமைய, அரசுத் துறை ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக தனியார் துறை ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச சம்பளத்தையும் உயர்த்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதன்படி, 2025 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க “ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச வேதன (திருத்தச்) சட்டம்”, 9 ஆம் இலக்க “வேலையாட்களின் வரவுசெலவுத்...

சமூகமயமாக்கப்படும் இளைஞர்களுக்கு வீடு கட்ட நிதி உதவி – அமைச்சரவை ஒப்புதல்!

நிறுவனங்களில் இருந்து சமூகமயமாக்கப்படும் மற்றும் திருமணத்தை எதிர்நோக்கும் இளைஞர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் இதற்காக 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த உதவியால், இளைஞர்கள் நிரந்தரமும் பாதுகாப்பானதும் ஆன வீடுகளை கட்டம் கட்டமாக கட்டியெழுப்ப இயலும். இந்தத் திட்டம்,...

வட்டுவாகல் பாலம் புனரமைப்புக்கு அமைச்சரவை ஒப்புதல்!

வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வட்டுவாகல் பாலம் என அழைக்கப்படும் பரந்தன் - கரைச்சி – முல்லைத்தீவு (A035) வீதியின் 50/1 ஆம்...

பதில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் நியமனம்!

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் இடைநீக்கம் செய்யப்பட்ட காலப்பகுதியில், அவரது சம்பளத்தில் பாதியை வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார். மேலும், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் மேலதிக...

நீரோட்டங்கள் மூலமான போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அனுமதி!

அரச - தனியார் பங்குடமையின் கீழ் நீரோட்டங்களைப் பயன்படுத்தி சுற்றுலா மற்றும் பயணிகள் போக்குவரத்து நடவடிக்கைகளை மேம்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காகவும், நகர்ப்புற பிரயாணிகளின் போக்குவரத்துக்காகவும் நீர்மூலங்கள் மற்றும் நீரோட்டங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நாட்டின் கடலோரத்தையும் , உள்ளக ரீதியாக காணப்படும் நீரோட்டங்களையும் பயன்படுத்தி ஒரு சில பிரதேசங்களை...

அரச சேவையின் வேதனத்தில் மாற்றமா?

இந்த வருட பாதீட்டின் மூலம் அரச சேவையின் வேதனத்தைத் திருத்தம் செய்வதற்காக நிதி அமைச்சராக ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தப்பட்ட வேதன அளவுத் திட்டத்திற்கமைய வேதனக் கொடுப்பனவுக்கான ஏற்பாடுகள் உள்ளடங்கிய சுற்றறிக்கையின் மூலமான ஆலோசனைகளை வெளியிடுதல் தொடர்பான யோசனைக்கே அமைச்சரவை அனுமதி...

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தில் திருத்தம்!

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, நிலையற்றவர்கள் என்ற சமூக பிரிவினருக்கான உதவித்தொகை கிடைக்கின்ற காலத்தை எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், இயலாமைக்குட்பட்டவர்கள் மற்றும் சிறுநீரக சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித் தொகையை 7,500 ரூபாவிலிருந்து 10 ஆயிரம்...

ஆர்முடுக்கி இயந்திரங்களை 02 கட்டங்களின் கீழ் விநியோகிப்பதற்கு அமைச்சரவை அனுமதி..!

அதிகவலு கதிரியக்க சக்தியுடன் கூடியதும் உயரிய தரத்துடன் கூடியதுமான கதிரியக்க சிகிச்சை உபகரணங்கள் விநியோக கருத்திட்டத்தின் 2ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார். புற்றுநோய் சிகிச்சை சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் 14 நேர்கோட்டு ஆர்முடுக்கி இயந்திரங்களை 02 கட்டங்களின்...

வாகனங்களின் வடிவமைப்புக்களை (Design) மாற்றுதலுக்கு அமைச்சரவை அனுமதி!

மோட்டார் வாகனங்கள் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளுக்கமைய வாகனங்களின் வடிவமைப்புக்களை (Design) மாற்றுதல் மற்றும் மாற்று உருவமைப்புக்களை (Modification) மாற்ற அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அதன்படி , 1983 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மோட்டார் வாகனங்கள் (தயாரித்தல்) கட்டளைகள் அவ்வப்போது திருத்தப்பட்டு, வாகனங்கள் மாற்று உருவமைப்புக்கள் செய்யக்கூடிய விதங்கள் பற்றிய ஒழுங்குவிதிகள் வர்த்தமானி அறிவித்தல்...
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம்...
- Advertisement -spot_img