சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இதன்படி குறித்த தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் மற்றும் இந்திய மாஸ்டர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இந்தநிலையில் இலங்கை மாஸ்டர்ஸ் அணியை குமார சங்கக்காராவும், இந்திய மாஸ்டர்ஸ் அணியை சச்சின் டெண்டுல்கரும் வழிநடத்தவுள்ளனர்.
இதற்கமைய மும்பையில் இடம்பெறவுள்ள குறித்த போட்டி இன்றிரவு 7.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.








