பயன்படுத்தப்படாத மூன்று விமானங்களுக்கு பலவருடங்களாக மாதாந்தம் 9 இலட்சம் டொலர் தவணையாகச் செலுத்தப்பட்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று விமானங்களும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானது என்று தெரிவித்தார்.

பிரதி அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கருத்து தெரிவித்தார்.

மேலும், தற்போது ஸ்ரீலங்கன் விமானச் சேவையில் மொத்தம் 22 விமானங்கள் இருப்பதாகப் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தற்போது பிரதான விமானச் சேவைக்கு 3,194 ஊழியர்களும், மூலோபாய வர்த்தக பிரிவுகளில் 2,862 ஊழியர்களும் மொத்தம் 6,056 ஊழியர்களுக்கு பணிபுரிவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here