யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (2/25/2025) எம்.ஏ.சுமந்திரன் ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார். தாம் ஏற்கனவே எடுத்துக் கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக தனித்துப் போட்டியிடுவதென்றும் பின்னர் கூட்டாக ஆட்சியமைக்க முடியுமென்றும் தெரிவித்தார்.
பங்காளிக் கட்சிகளுடன் எமது தலைவர் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]








