தாய்வான் எல்லைப்பகுதியில் சீனாவின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்நிலையில், சீனாவின் பீஹாங் பல்கலைக்கழகம் , பீஜிங் தொழிநுட்ப நிறுவனம், நான்ஜிங் விமானவியல் மற்றும் வின்வெளி பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஏழு பல்கலைக்கழகங்களுக்குத் தாய்வான் தடை விதித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக தாய்வான் வெளியிட்ட அறிக்கையில், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சீன பல்கலைகழகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.








