மித்தெனிய முக்கொலை சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை மித்தெனிய காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், வீரகெட்டிய காவல் நிலையத்தில் பணிபுரியும் 36 வயதுடைய காவல்துறை கான்ஸ்டபிள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் ஜூலம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

விசாரணைகளின் போது கைது செய்யப்பட்டவர் சந்தேக நபர்களுக்கு T-56 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் 12 தோட்டாக்களை வழங்கியதாகத் தெரியவந்துள்ளது.

இந்தக் குற்றச் செயல் தொடர்பாக இதுவரை 07 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மித்தெனிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here