Friday, June 12, 2026
No menu items!

தோட்டாக்கள்

உணவகம் ஒன்றில் 40 தோட்டாக்கள் கண்டுபிடிப்பு!

சிகிரியா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் 9mm துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 40 தோட்டாக்களை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். உணவகத்தின் முகாமையாளரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இந்த தோட்டாக்கள் நேற்று(14) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உணவகத்தின் அறையொன்றில் உள்ள அலுமாரியின், சிறிய பெட்டியில் இந்த தோட்டாக்கள் வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.   <!-- -->  

பயணப்பொதியொன்றிலிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்பு..!

மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுகங்கை காப்புக்காடு பகுதியில் பயணப்பொதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T-56 ரக துப்பாக்கி மற்றும் 02 தோட்டாக்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாத்தளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 02 பைகளில் இந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் நேற்று (29/03/2025) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த இடத்தில்...

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இளைஞர்கள் கைது..!

பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓவல் மைதானத்திற்கு அருகில் இயங்கக்கூடிய தோட்டாக்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொரளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் நேற்று (22/03/2025) இரவு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 07, T-56 ரக தோட்டாக்கள் மற்றும் 01 LMG தோட்டாவினையும் பொலிஸார்...

ஆயிரக்கணக்கான தோட்டாக்கள் மீட்பு..!

T-56 துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் வெடிக்காத தோட்டாக்கள் அடங்கிய பை ஒன்று புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, சிலாவத்தை, தியோநகர் பகுதியில் இவை கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடற்படை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கடற்படையினரும் காவல்துறையினரும் மேற்கொண்ட தேடுதலின் போது பொதியொன்றினுள் வெடிக்காத நிலையில் 1,400 T-56 ரக தோட்டாக்கள் மீட்கப்பட்டன. குறித்த இந்த சம்பவம்...

மித்தெனிய முக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை கான்ஸ்டபிள் கைது!

மித்தெனிய முக்கொலை சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை மித்தெனிய காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர், வீரகெட்டிய காவல் நிலையத்தில் பணிபுரியும் 36 வயதுடைய காவல்துறை கான்ஸ்டபிள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர் ஜூலம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். விசாரணைகளின் போது கைது செய்யப்பட்டவர் சந்தேக நபர்களுக்கு T-56 ரக துப்பாக்கிக்குப்...

முன்னாள் காவல்துறை கான்ஸ்டபிள் இல்லத்திலிருந்து கைக்குண்டுகள் மீட்பு!

அனுராதபுரம் - கலென்பிந்துனுவெவ பகுதியில் உள்ள முன்னாள் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் வளாகத்திலிருந்து 341 தோட்டாக்கள் மற்றும் 4 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலின்படி, குறித்த பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவ்வாறு தோட்டாக்கள் மற்றும் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. 281 ரி -56 தோட்டாக்கள், ஐந்து மெகசின்கள் மற்றும் 84...

துப்பாக்கிகளை மீள பெற்றுக்கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்…

பொதுமக்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள அனைத்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை மீள பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. குறித்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் எதிர்வரும் நவம்பர் 07 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்கப்பட வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. துப்பாக்கிகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு தேவை என்ன என்பதை ஆராய்ந்த பின்னர் உரிமையாளர்களுக்கு மீள கையளிக்கப்படும் என...

பாடசாலை மாணவனின் வீட்டிலிருந்து தோட்டாக்கள் மீட்பு…!

அநுராதபுரம், கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவனின் வீட்டிலிருந்து தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கலென்பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 6 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் T-56 ரக தோட்டாக்களை வைத்திருந்ததை அவதானித்த ஆசிரியர் ஒருவர் இது தொடர்பில் பாடசாலை அதிபருக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து, பாடசாலை அதிபர்...

துப்பாக்கிகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் மீட்பு…!

இராஜகிரிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்த பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் துப்பாக்கிகள் உள்ளிட்ட பல ஆயுதங்களை கண்டுபிடித்துள்ளனர். அண்மையில் மாகொல பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குழுவொன்றிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாகொல பிரதேசத்தில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் அண்மையில் 7 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து...
- Advertisement -spot_img

Latest News

போலி ஆயுதங்களை பயன்படுத்தி வரும் பாதாள உலக குழுவினர்

இலங்கையின் குற்றக் கும்பல்கள், இராணுவத் தரத்திலான ஆயுதங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் போலி ஆயுதங்களின் பயன்பாடு...
- Advertisement -spot_img