வடக்கில் உள்ள போதைப்பொருள் பாவனைக்கு முழு பொறுப்பும் இராணுவத்தினரையே சாரும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் பிரச்சினை ஏற்பட்டால் இராணுவ முகாம்களில் சென்று ஒழிவதாகவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் மக்கள் தொகையை விடவும் மதுபான சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பா.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் நாட்டின் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாட்டில் உள்ள காவல்துறையினர் சீராக இருந்தால் போதைப்பொருளினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவீகரன் தெரிவித்துள்ளார்.







