தேசபந்து தென்னகோன் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் குற்றப் புலனாய்வுத் துறையிடம் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இன்று (06/03/2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபரை கைது செய்வதற்காக தற்போது பல குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது சட்டத்திற்குக் கீழ்ப்படியாமல் தலைமறைவாக உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவை மீறி தப்பிச் சென்ற சந்தேக நபர்களைக் கைதுசெய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட அதே நடைமுறையின் கீழ், முன்னாள் பொலிஸ் மா அதிபரையும் கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், முன்னாள் பொலிஸ் மா அதிபரைக் கைது செய்வதற்கு பொலிஸார் எந்த சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க மாட்டார்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.








