நடிகர் ரவி- ஆர்த்தி தம்பதி இடையேயான விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் போட்ட உத்தரவு சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
ரவி மோகன்- ஆர்த்தி விவாகரத்து
தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி மோகன், ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.
ரவி மோகனுக்கும் அவரின் காதல் மனைவி ஆர்த்திக்கும் இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக பிரியப்போவதாக முடிவெடுத்து சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக இருவரது சமூக வலைத்தளப்பக்கங்களிலும் அறிக்கைகள் வெளியிடப்பட்டன.
இதனை தொடர்ந்து ரவி மோகன்- ஆர்த்தி தம்பதிகளின் விவாகரத்து வழக்குகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. கடைசியில் இருவரும் ஒன்றினைவார்களா? என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மாமியார் போட்ட பதிவு
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சுஜாதா விஜயகுமார் சைரன் படத்தில் நடிகர் ரவி மோகன் அவரை புகழ்ந்து பேசியதை காணொளியாக இரண்டு வாரங்களுக்கு முன்னர் பகிர்ந்துள்ளார்.
அத்துடன், அந்த காணொளியில் சுஜாதாவும் தன்னுடைய மருமகனை புகழ்ந்து பேசியதுடன், அவரை வாழ்த்தியுள்ளார்.
காணொளியை பார்த்த ரசிகர்கள், “மகளுடன் விவாகரத்து, மாமியார் போட்ட பதிவை பாருங்க..” எனக் கருத்துக்களை குவித்து வருகிறார்கள்.
இந்த செய்தி இணையவாசிகள் மத்தியில் பேசும் பொருளாக இருந்து வருகிறது.








