கடந்த 9 மாதங்களாகச் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் நாளை (18) பூமிக்குத் திரும்புவர் என்று நாசா அறிவித்துள்ளது.

இந்த நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்குத் திரும்பவுள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரின் ஆண்டு வருமானம் ரூ 1.08 கோடியிலிருந்து ரூ 1.41 கோடி வரை இருக்கலாமென கூறப்படுகின்றது.

மேலும் விண்வெளியில் 287 நாட்கள் தங்கியதற்காக ஒரு நாளுக்கு 4 டொலர்கள் வீதம் 1,148 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here