எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் முடிந்தவரையில் தங்களது கட்சி தனித்து ஆட்சியமைப்பதற்கு முயற்சிப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்குரிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தனித்து ஆட்சியமைப்பது கடினமான விடயம் என்ற போதிலும், அதற்காக முயற்சிப்பதாகவும், பெரும்பான்மை கிடைக்காத இடங்களில் ஆட்சியமைக்கத் தகுதிபெற்றவர்கள் யார் என்பதைப் பொறுத்தே தங்களது தீர்மானம் எடுக்கப்படும் எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here