கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் வீட்டின் குளியல் அறை பகுதியில் சூட்சுமமான முறையில் நிலத்தில் தோண்டி யாருக்கும் சந்தேகம் வராத அளவுக்கு கோடா பரல் தாக்கப்பட்டு தண்ணீர் குடத்தில் குழாய்கள் பொருத்தப்பட்டு கேஸ் (gas) அடுப்பு மூலம் தீ மூட்டப்பட்ட நிலையில் கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கசிப்பு உற்பத்தி முற்றுகையின் போது 380 லீட்டர் கோடாவும் 20 லீட்டர் கசிப்பும் கசிப்பு உற்பத்திக்கான பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் கசிப்பு உற்பத்தியை மேற்கொண்ட 20 வயது இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

[கிளிநொச்சி  நிருபர் – பரமசிவன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here