தென் கொரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
1,300 ஆண்டுகள் பழமையான ஒரு கோயிலும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென் கொரியாவின் சியோல் பகுதியில் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ பரவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் 200க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன, மேலும் 27,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.
தென் கொரியாவின் ஆறு தென்கிழக்கு பிராந்தியங்களில் ஏற்பட்ட காட்டுத்தீ 43,330 ஏக்கர் நிலங்களை எரித்து 19 பேர் காயமடைந்துள்ளனர்.
காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த கிட்டத்தட்ட 9,000 தீயணைப்பு வீரர்களும் 130க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.







