நாளுக்கு நாள் நாட்டில் இருத நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து வருவதாக இருதயநோய் நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்தார்.

தினசரி 175 முதல் 200 பேர் வரை இருத நோயாளர்களாக அடையாளங் காணப்படுவதாக வைத்தியர் கோட்டாபய ரணசிங்க கூறினார்.

உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இருத நோய்க்கு வழிவகுப்பதாக இருதயநோய் நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க சுட்டிக்காட்டினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here