An aerial photo shows a helicopter floating on the sea after missing while transporting a patient off the coast of Iki Island, Nagasaki Prefecture, western Japan and Kyushu Island region, on April 7, 2025. The helicopter transporting a patient from Tsushima in Nagasaki Prefecture to a hospital in Fukuoka City went missing and was found off the coast of Iki on April 6th. Three of the six people on board, 86-year-old female patient, her son, and a male doctor, were confirmed dead. ( The Yomiuri Shimbun )

ஜப்பானில் மருத்துவ போக்குவரத்து ஹெலிகொப்டர் கடலில் விழுந்து விபத்திற்குள்ளானதில், ஒரு நோயாளி உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜப்பானின் நாகசாகி மாகாணத்தில் உள்ள விமான நிலையத்திலிருந்து புகுவோகாவில் உள்ள வைத்தியசாலைக்கு நேற்று (6) ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதைத்தொடர்ந்து இரண்டு கடற்படை விமானங்கள் மற்றும் மூன்று ரோந்து கப்பல்கள் மூலம் தேடுதல் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் வைத்தியர் ,நோயாளி மற்றும் பராமரிப்பாளர் ஆகியோரின்  உடல்கள் ஹெலிகொப்டர் மூலம் மீட்கப்பட்டதாக ஜப்பான் விமான தற்காப்புப் படையின் கூறினர்.

ஜப்பானின் புகழ்பெற்ற “டொக்டர் ஹெலிகொப்டர்” திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த திட்டம் அவசரமாக சிறப்பு மருத்துவ பராமரிப்பு தேவைப்படும் நோயாளிகளைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படுகிறது.

நோயாளிகளுக்கு  தேவையான சிகிச்சைகளை வழங்கக்கூடிய வைத்தியசாலைகளுக்கு விரைவாக கொண்டு செல்வதன் மூலம் உயிர்களைக் காப்பாற்றுவதில் இந்தத் திட்டம் முக்கியமானதாக கருதப்படுகிறது இருப்பினும், இதுபோன்ற ஒரு சில விபத்துகள் தவிர்க்க முடியாதவையாக இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here