குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாதன் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக பிள்ளையான் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2006 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி, கொழும்பு 7இல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்குபற்றியிருந்த போது, பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரன் கடத்தப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here