Thursday, November 19, 2026
No menu items!

சிவநேசத்துரை சந்திரகாந்தன்

சி.ஐ.டியில் ஆஜராகும் பிள்ளையானின் நெருக்கமான சகா –  வெளியான பரபரப்பு தகவல்!

ஆட்கடத்தல் சம்பவம் ஒன்றுக்காக கைது செய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் நெருக்கமான சகா ஒருவர், தனது சுயவிருப்பின்பேரில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருக்கிறார். கொழும்பில் ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ஆனந்த விஜேபால, கம்மன்பில - பிள்ளையான் சந்திப்பின்போது பிள்ளையான் அழவில்லை என்றும்...

பிள்ளையானுடன் கலந்துரையாடுவதற்கு  வாய்ப்பளிக்குமாறு கோரிக்கை விடுத்த ரணில் விக்ரமசிங்க!

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஊடகமொன்றுக்கு இதனை உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசத்துரை சந்திரகாந்தனுடன் தொலைபேசிமூலம் உரையாட அனுமதிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி...

பிள்ளையானை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை..!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் கடந்த 08 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாதன் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக பிள்ளையான் கைது செய்யப்பட்டமை...

பிள்ளையானை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை..!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார். கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாதன்...

பிள்ளையானிடம் விசாரணைகளை ஆரம்பித்த சி.ஐ.டி..!

பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனிடம் குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்று அவர் மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாதன் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2006ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி,...

பிள்ளையான் கைது செய்யப்பட்டதை வரவேற்ற சாணக்கியன்..!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டதை தாம் வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். இந்த கைது நடவடிக்கை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனைக் குறிப்பிட்டிருந்தார். இதேவேளை கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பிலும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

சி.ஐ.டியினால் பிள்ளையான் கைது..!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நபர் ஒருவர் கடத்தப்பட்டு காணாமல் போனமை குறித்த விசாரணையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்தநிலையில் அவர் இன்று அதிகாலை கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகிய பிள்ளையான்…!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் வாக்கு மூலம் வழங்குவதற்காக இன்று புதன்கிழமை (20.11.2024) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். சனல் 4 வெளியிட்ட வீடியோவில் பிள்ளையானின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை குறித்து அவரது வாக்குமூலத்தை பெறுவதற்காகவே குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரை அழைத்துள்ளனர்.

சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.!

பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்த விசேட காணொளித் தொகுப்பு ஒன்றில் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் முன்னாள் செயலாளரான அசாத் மௌலானா என்பவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார். அதில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் ஏப்ரல் 21...
- Advertisement -spot_img

Latest News

தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

கடுவலையில் மின்சார உபகரண விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வர்த்தக நிலையத்தில் தீ பரவியதில்...
- Advertisement -spot_img